#JUST IN : திமுகவினர் ஷாக்..! பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்..!

 
1

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி சட்டசபை தேர்தலில் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான், விஜயிடம் மேனேஜராக பணியாற்றியவர் பிடி செல்வக்குமார்.கடந்த டிசம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் சேர்ந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் மாநில வர்த்தகர் அணியில் துணை செயலாளர் பொறுப்பு வழங்கினார்.

இந்நிலையில் தான் பிடி செல்வக்குமார் திமுகவில் இருந்து விலகி உள்ளாார். இதுதொடர்பாக பிடி செல்வகுமார் இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் தங்கள் இயக்கத்தில் இணைந்தேன். எனக்கு மாநில வர்த்தகர் அணியில் துணை செயலாளர் பொறுப்பு தந்தீர்கள். அதற்கு நான் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கலப்பை மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அரசு பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கலையரங்கம் கட்டி தந்துள்ளேன்.

திராவிட முன்னேற்ற கழகம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில், குமரி மக்களுக்கு மேலும் அதிரடியாக நல்ல செயல் திட்டங்களை செய்ய எண்ணியிருந்தேன். காலம் எனக்கு அதிகாரம் அளிப்பதை தள்ளிப் போடுகிறது.

எனவே குமரி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் திமுகவில் இருந்து விலகி மீண்டும் கலப்பை மக்கள் இயக்கம் மூலமாக எனது பணியை தொடர விரும்புகிறேன். காலம் மாறும் மாற்றமே மானுட தத்துவம் என்ற அடிப்படையில் என்றும் மக்களுக்காக நற்பணியாற்ற காத்திருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.