#JUST IN : கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தந்தை காலமானார்..!!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தந்தை சாந்தகுமாரன் (89). இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஐபிஎல் போட்டியில் விளையாடும்போது, மேட்ச்-பிக்சிங்கில் சிக்கினார். இதனால் இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர், மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தாலும், பிசிசிஐ அவர் மீதான தடையை நீக்க மறுத்தது.
இவரது தந்தை வி. சாந்தகுமாரன் நாயர். 89 வயதான இவர், வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு 9.45 மணிக்கு உயிரிழந்தார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வர வேண்டியுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை வரை, உடல் மருத்துவமனையில் வைக்கப்படுகிறது. ஞாயிறு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கோதமங்கலத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பின் 4 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது.
ஸ்ரீசாந்தின் தாயார் டி.என். சாவித்ரிதேவி ஆவார். தீபு என்ற சகோதரனும், நிவேதிதா, திவ்யா ஆகிய இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

