#JUST IN : குவியும் வாழ்த்துக்கள் ..! இவர் தான் தவெக-வின் இளம் வயது எம்எல்ஏ..!

 
1

தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில், இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சட்டப் பேரவை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சபரி ஐயங்கரன், கம்பம் சட்டமன்ற தொகுதியில் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் ஆண்டிபட்டி மற்றும் போடி தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பாண்டி மற்றும் பிரகாஷ் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

இதனிடையே, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை விட 19,321 வாக்குகள் அதிகம் பெற்று தவெக வேட்பாளர் சபரி ஐயங்கரன் (மொத்த வாக்குகள் 85,656) வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு வயது 29. இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் வயது எம்எல்ஏ என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு தவெக சார்பில் வெற்றி பெற்றதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.