#JUST IN : முதலமைச்சர் விஜய் நாளை டெல்லி பயணம்..!!

 
Vijay modi

தவெக தலைவர் விஜய் நாளை (மே 27) டெல்லி செல்ல உள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நாளை டெல்லி செல்கிறார் விஜய்.

இந்த அரசுமுறை பயணத்தின் போது, அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க வாய்ப்பு.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைக்கிறார்.

முதலமைச்சர் விஜய் நாளை டெல்லி வருவதை முன்னிட்டு உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.