#JUST IN : CJP நிறுவனர் அபிஜித் தீப்கே தடுப்புக் காவலில் கைது!
Oct 16, 2026, 17:10 IST1792150848798
காக்ரோச் ஜனதா கட்சி' (Cockroach Janta Party - CJP) அமைப்பின் நிறுவனரான அபிஜித் தீப்கே (Abhijeet Dipke), வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல் துறையினரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார். 'லெஹ்ரா தோ திரங்கா' (Lehra Do Tiranga) என்ற பெயரிலான தேசியக் கொடி ஏந்தும் பேரணியைத் தொடங்குவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரே வாரத்தில் அபிஜித் தீப்கே காவலில் எடுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

