#JUST IN : மாவீரன் பொல்லான் சிலை மற்றும் அரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
தமிழக முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு சென்றுள்ளார். நேற்று கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாலையில் தொழில்துறை சார்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிலையில் இன்று (26.11.2025) காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லானின் உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து தீரன் சின்னமலை மணிமண்டபம் சென்று, அவரது உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்ய உள்ளார். மேலும், சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ. 605 கோடியில் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார். அதோடு, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும் இன்று மாலை, சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத் தந்தை பரமசிவனின் உருவச் சிலையைத் திறந்து வைக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சற்றுமுன் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, ஜெயராமபுரத்தில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவீரன் பொல்லான் சிலையுன் கூடிய அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

