#JUST IN : சூடுபிடிக்கும் செக் மோசடி வழக்கு.. நடிகர் விமல் மனு தள்ளுபடி..!

 
vimal

நடிகர்​கள் விமல், பிரபு, நடிகை ஆனந்தி உள்​ளிட்​டோர் நடித்த படம் மன்​னர் வகையறா. இப்​படத்தை தயாரிக்க திரைப்பட பைனான்​சி​யர் கோபி என்​பவரிட​மிருந்து விமல் ரூ.4.5 கோடியை கடனாகப் பெற்​றிருந்​தார்.

இதற்​காக விமல் வழங்​கிய காசோலை வங்​கி​யில் பணமின்றி திரும்​பியதையடுத்​து, அவருக்கு எதி​ராக சென்னை சிறுவழக்​கு​கள் நீதி​மன்​றத்​தில் காசோலை மோசடி வழக்கை கோபி தொடர்ந்​தார்.

இந்த வழக்கு விசா​ரணை சென்னை 11-வது சிறு வழக்​கு​களுக்​கான நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஆர்த்தி முன்​பாக நடந்​தது. விசா​ரணைக்​காக நடிகர் விமல் நேரில் ஆஜராகி​யிருந்​தார்.

பைனான்​சி​யர் கோபி தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஆர்​.வெங்​கடேஷ், “நடிகர் விமல் வழங்​கிய ரூ.4.5 கோடி காசோலை பணமின்றி திரும் பிய நிலை​யில், அந்த தொகையை கொடுக்க விமல் முன்​வர​வில்​லை” என வாதிட்​டார்.

அதையடுத்து வழக்கை விசா​ரித்த நீதிப​தி, குற்​றம்​சாட்​டப்​பட்ட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்​டனை விதித்​தும், வாங்​கிய கடன் தொகையை முழு​மை​யாக திருப்பி செலுத்​த​வும் உத்​தர​விட்​டார்.

இந்நிலையில் செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் விமல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.தனக்கு எதிரான செக் மோசடி வழக்கில் மோசடியாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கக் கோரி நடிகர் விமல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு