#JUST IN : தவெகவில் இணைந்த பின் சி.விஜயபாஸ்கர் மேடையில் வைத்த முக்கிய கோரிக்கை..!
அதிமுகவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் இன்று தவெகவில் இணைத்து கொண்டனர். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு தவெக துண்டை அணிவித்து வரவேற்றார்.
இதில் திருச்சியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, திருப்பூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், முன் னாள் எம்.எல்.ஏ.க்கள் மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்) எம்.ராம்கு மார் (கும்பகோணம்), ராஜவர்மன் (திருச்சுழி). சதன்பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி), மாவட்ட செயலாளர்கள் பி.கே.வைரமுத்து (புதுக்கோட்டை), இளம்பை தமிழ்செல்வன் (பெரம்பலூர், ஒரத்தநாடு மா.சேகர் (தஞ்சை), சீனிவாசன் (திருச்சி) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், 208 ஒன்றிய செயலாளர்களும் த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்காக கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200பேருந்துகள், 600 கார்கள் மூலம் 15 ஆயிரம் நிர்வாகிகள் வந்துள்ளன.
தவெக இணைப்பு விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "இது வெறும் டிரைலர்தான்..""இங்கு பார்ப்பது வெறும் டிரெய்லர் தான். தலைமையின் ஆதரவோடு மெயின் பிக்சரை டெல்டா மாவட்டத்தில் காட்டுவோம். அங்கே மீண்டும் ஒரு பிரமாண்ட இணைப்பு விழா நடத்த தயாராக உள்ளோம்"எல்லா தேர்தல்களிலும் இனி தவெக வெற்றி பெறும். உறுதியான ஒற்றை தலைமையில் பயணித்து வெற்றி வாகை சூடுவோம், பயணிப்போம், உழைப்போம். என பேசினார்.தேர்தலுக்கு முன் தவெக உடன் கூட்டணி வைக்க அதிமுக தலைமையிடம் வலியுறுத்தினோம். தேர்தலுக்குப் பின் ஆதரவு தர வலியுறுத்தினோம், ஆனால் தலைமை கேட்கவில்லை, என பேசினார்.
மேலும், கிடப்பில் இருக்கும் காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை தொடங்கி 7 மாவட்ட விவசாயிகளுக்கு நீர் வழங்க வேண்டும், ஜல்லிக்கட்டு துணை நிற்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மாற்று கட்சியினர் இணையும் விழாவில் தவெக இணைப்பு விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாங்கள் உருவாக்கிய பொதுச்செயலாளரின் தவறான முடிவால், அதிமுக தள்ளாடுகிறது. உண்மையை சொன்னால், துரோகி என்கிறார்கள், என பேசினார்.ஈபிஎஸ்-ன் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாடுகிறது. உண்மையை எடுத்து சொன்னால் துரோகி என்கிறார்கள். CM விஜய் உருவாக்கியது ஒரு தலைமுறை மாற்றம்"
உண்மையைச் சொன்னால் துரோகியா?
"ஒரு தலைவன் சரியான முடிவெடுக்காமல் போனால் என்னாகும் என்பதற்கு உதாரணம்தான் இன்றைய அதிமுக. திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்கிறார்கள். தொண்டர்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படவில்லை. உண்மையை எடுத்துச் சொல்பவர்களை துரோகிகள் என்கிறார் ஈ.பி.எஸ்".தவெக இணைப்பு விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழகத்தில் இல்லை, இந்தியாவில் அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர் போல இனி தமிழகத்தில் விஜய் ஆட்சி தான் தொடரும், என பேசினார்.
"நமது முதலமைச்சர் இன்னும் ஓரிரு வாரங்களில் கரூர் வர இருக்கிறார். அந்த கரூர் நிகழ்ச்சியில் இன்னும் அலைகடலாக பல தொண்டர்களை அதில் இணைந்து. இந்த இயக்கம் தொடர்ந்து வெற்றி பெற உழைப்போம்'' என்றார்.
``ஒரு தலைமுறை மாற்றம்''..."மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர் CM விஜய். அரசியல் மாற்றம் என்பது ஒரு தலைமுறை மாற்றம்''.

