#JUST IN : நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு: பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் வெளிநடப்பு..!

 
1

தமிழ்நாட்டில் மருத்துவக் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு முறையானது கிராமப்புற மற்றும் எளிய பின்னணி கொண்ட மாணவர்களின் மருத்துவக் கனவுக்குப் பெரும் தடையாக இருப்பதாக மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு முற்றுப் புள்ளியாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் முக்கியத் தீர்மானத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 நீட் தேர்வு நடைமுறையால் தனியார் பயிற்சி மையங்களே பலன் பெறுகின்றன. கிராமப்புற அரசு பள்ளி மாணவர் விவசாயி பிள்ளைகள் அதே அளவிலான பயிற்சியை பெற முடியுமா?” என்று அருண்ராஜ் கேள்வி எழுப்பினார். சமூக நீதியை பாதிக்கும் சமவாய்ப்பை குறைக்கும் எந்த ஒரு தேர்வையும் ஏற்க முடியாது என்பதே நம் கொள்கை என்று மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார். பேரவையின் ஒருமித்த குரலை ஒன்றிய அரசு மதிக்க வேண்டும் மாநில உரிமையை மதிப்பதே கூட்டாட்சி கொள்கை என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் தீர்மானத்திர்கு எதிர்ப்பு தெரிவித்தார். நீட் தேர்வு பயிற்சியை அரசே நடத்த வேண்டும் என வலியுறுத்திய பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் சட்டப்பேரவையில் இருந்தூ வெளிநடப்பு செய்தார்