#JUST IN : தமிழிசை தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைத்த பாஜக..!!
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும் இன்று தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான திருமதி. Dr.தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அமைக்கப்படுகிறது. 12 பேர் குழுவில் இடம்பெற்றவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. VP துரைசாமி ExMP
2. Dr.K.P.இராமலிங்கம் EXMP
3. Dr.P.கனகசபாபதி
4. Plot இராம ஸ்ரீநிவாசன்
5. திருமதி கார்த்தியாயினி ExMayor
6. திரு.நரசிம்மன் ExMP
7. KS இராதாகிருஷ்ணன்
8. ANS பிரசாத்
9. R.அர்ஜுனமூர்த்தி
10. திருமதி ராஜலட்சுமி
11. R.ரவிச்சந்திரன்
12. R.ஆதித்யா சேதுபதி


