#JUST IN : பாரதிராஜா உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு..!
"இயக்குநர் இமயம்" பாரதிராஜாவின் மறைவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக முதல்வர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வயது முதிர்வு மற்றும் தொடர் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாகவே தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த இயக்குநர் பாரதிராஜா, இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்த பாரதிராஜாவின் உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. செய்தி அறிந்ததும் உடனடியாக அங்கு விரைந்த தமிழக முதல்வர் விஜய், பாரதிராஜாவின் உடலுக்கு மலர்மாலை அணிவித்து தனது கணத்த இதயத்தோடு இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.
இந்நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செய்யப்படுகிறது. நாளை மாலை 3 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம், காட்ரோட்டில் உள்ள பண்ணை தோட்டத்தில் நாளை மாலை 3 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் நல்லடக்கம்.

