#JUST IN : ஜனவரி 20-ந்தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும்: அப்பாவு அறிவிப்பு..!
Dec 26, 2025, 12:18 IST1766731697085
சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
"2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார். அதனைத் தொடர்ந்து, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும்."
இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.


