#JUST IN : 3வது முறையாக மாநிலங்களவை எம்.பி ஆகும் அன்புமணி..!
Mar 5, 2026, 10:40 IST1772687426530
எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய பாமக தலைவர் அன்புமணி, தலைமைச் செயலகம் வருகை தந்துள்ளார்.மனைவி சௌமியா அன்புமணியும் உடன் வந்துள்ளார்
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

