#JUST IN : அன்பில் மகேஷ் கைதைத் தொடர்ந்து அதிரடி! தொழில் அதிபர் சண்முகபிரியா வீட்டில் அதிரடி ரெய்டு!
கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கட்சி நிதி என்ற பெயரில் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
காவல் துறையால் கைது செய்யப்பட்ட அவர், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனக்கு ஜாமின் கோரி அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. மேலும் அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி லஞ்ச புகார் தொடர்பாக சென்னை பெருங்குடியில் உள்ள ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தொழில் அதிபர் சண்முகபிரியா வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 10 பேர் கொண்ட போலீசார் காலை முதல் சண்முக பிரியா வீட்டில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி லஞ்ச புகார் - சென்னை பெருங்குடியில் உள்ள தொழில் அதிபர் சண்முகபிரியா வீட்டில் போலீஸ் ரெய்டு #DMK | #AnbilMahesh | #Raid | #WomensBusiness | #PolimerNews https://t.co/UYgBilza5h
— Polimer News (@polimernews) October 28, 2026

