#JUST IN : "அஜித் அப்படிச் சொல்லவே இல்லை!" - 'No Need' சர்ச்சை குறித்து மேலாளர் சுரேஷ் சந்திரா அதிரடி விளக்கம்.

 
1

திருவான்மியூரில் உள்ள வாக்குச் சவாடிக்கு நடிகர் அஜித் சுமார் 6.45 மணிக்கு வாக்கு செலுத்த வந்தார். அவரை பார்க்க அதிக அளவில் ரசிகர்கள் கூடினர். மேலும், வாக்காளர்களும் வந்திருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரை முன்னதாக வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர். அதன்படி முன்னதாகவே வாக்களித்தார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது மாற்றம் தேவையா என தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேள்வி கேட்டதாகவும் அதற்கு அவர் NO NEED என பதில் அளித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் NO NEED என அஜித்குமார் சொல்லவில்லை என விளக்கம் அளித்துள்ளார் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா.

வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது, "மாற்றம் தேவையா?" என்ற கேள்விக்கு நடிகர் அஜித்குமார் "No Need " என பதில் அளித்ததாக தகவல்கள் பரவின. இதனை மு.க. ஸ்டாலின் வரவேற்றதாகவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்கள் தொடர்பாக நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதில், "நடிகர் அஜித்குமார் 'No Need to Change' என்று எதுவும் கூறவில்லை. அவர் அப்படியான எந்த கருத்தையும் வெளியிடவில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.