#JUST IN : நடிகை சாய் பல்லவி நடிகர் எஸ் ஜே சூர்யா, விக்ரம் பிரபுக்கு கலைமாமணி விருது..!!
2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில், அடுத்த மாதம் நடக்க உள்ள விழாவில், முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.
நடிகை சாய் பல்லவி, நடிகர்கள் எஸ் ஜே சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்தது.
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.
2021ம் ஆண்டு
2021ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியல்:
திரைப்படம்
எஸ்.ஜே.சூர்யா- திரைப்பட நடிகர்
சாய் பல்லவி- திரைப்பட நடிகை
லிங்குசாமி- திரைப்பட இயக்குநர்
ஜெயகுமார்- திரைப்பட அரங்க அமைப்பாளர்
சூப்பர் சுப்பராயன் - திரைப்பட சண்டை ப்பயிற்சியாளர்
சின்னத்திரை
கமலேஷ்- சின்னத்திரை நடிகர்
இயல்
திருநாவுக்கரசு- எழுத்தாளர்
நெல்லை ஜெயந்தா - இயற்றமிழ்க் கவிஞர்
சந்திரசேகர் (எ) தங்கம்பட்டர்- சமயச்சொற்பொழிவாளர்
இசை
அசோக் ரமணி - குரலிசை
சற்குருநாதன் ஓதுவார்- திருமுறை தேவார இசை
தக்கேசி- தமிழிசைப் பாடகர்
நரேந்திரன்- மிருகதங்கம்
நரசிம்மன்- கோட்டு வாத்தியம்
பில்லப்பன்- நாதசுர ஆசிரியர்
டி.ஜே.சுப்பிரமணியன்- நாதசுரம்
சீனிவாசன்- நாதசுரம்
சேகர்- தவில்
நாட்டியம்
பழனியப்பன்- பரதநாட்டிய ஆசிரியர்
பிரியா கார்த்திகேயன்- பரதநாட்டியம்
நாடகம்
முருகன்- நாடக நடிகர்
நாராயணன்- நாடக இயக்குநர்
அலெக்ஸ்- ஆர்மோனியம்
இசை நாடகம்
விசுவநாதன்- இசை நாடக நடிகர்
கிராமியக் கலைகள்
வீர சங்கர்-- கிராமியப் பாடகர்
காமாட்சி- பொய்க்கால் குதிரை ஆட்டம்
முனுசாமி- பெரிய மேளம்
மருங்கன்- நையாண்டி மேள நாதஸ்வரம்
கே.கே.சி.பாலு- வள்ளி ஒயில்கும்மி
இதர கலைப்பிரிவுகள்
ஜவானந்தம்- ஓவியர்
சிறப்பு விருதுகள்
பாரதியார் விருது (இயல்)- முருகேச பாண்டியன்
எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை)- கே.ஜே. யேசுதாஸ்
பாலசரசுவதி விருது (நாட்டியம்)- பதஸ்ரீ முத்துகண்ணம்மாள்

