#JUST IN : நடிகர் ரவி மோகன் வழக்கு தள்ளுபடி : மாதம் ரூ. 40 லட்சம் கேட்ட ஆர்த்தியின் கோரிக்கையை கோர்ட் நிராகரித்தது..!!

 
Q

நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்துள்ளார். விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

தனக்கு ரவி மோகன் செலவுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஆர்த்தி. .

இந்நிலையில், ஆர்த்தியின் ஜீவனாம்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது விவாகரத்து வழக்கு விசாரணை முடியும் வரை மாதம் ரூ. 40 லட்சம் அல்ல ரூ. 3 லட்சம் ஆர்த்திக்கு ரவி மோகன் கொடுக்க வேண்டும். மேலும் மகன்களை தங்கள் அப்பாவை சந்திக்க எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகன்கள் ஆரவ், அயானை பார்க்க விடாமல் தடுக்கிறார் ஆர்த்தி. பள்ளிக்கு பாடிகார்டுடன் அனுப்பி வைக்கிறார். என் மகன்கள் கார் விபத்தில் சிக்கியதை கூட என்னிடம் தெரிவிக்கவில்லை. விபத்து குறித்து அறிந்து பதறிப் போன போதும் என்னை பிள்ளைகளை பார்க்க விடாமல் செய்துவிட்டார் ஆர்த்தி என்று வேதனைப்பட்டார் ரவி மோகன். இந்நிலையில் மகன்களை சந்திக்க இனி ரவிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.