#JUST IN : சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த நடிகர் அர்ஜுன்..!
நடிகர் அர்ஜுன், தனது மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து பரப்பப்படும் வதந்திகள் மற்றும் அவதூறு தொடர்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.தனது மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்துப் பரப்பப்படும் அவதூறு மற்றும் வதந்திகள் தொடர்பாக அவர் புகார் அளிக்க வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் உமாபதி ராமையா ஆகியோரின் திருமண வாழ்க்கை குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் விவாகரத்து வதந்திகளே இந்தப் புகாருக்கு முக்கியக் காரணமாகும்.
சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணத்தில் ஐஸ்வர்யா மட்டுமே கலந்து கொண்டார். உமாபதி மற்றும் தம்பி ராமையா குடும்பத்தினர் இதில் பங்கேற்காததைத் தொடர்ந்து, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு என இணையத்தில் வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்த நடிகர் தம்பி ராமையா, "இருவரும் சென்னையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். நேரமின்மை காரணமாகவே இத்தாலி திருமணத்திற்குச் செல்லவில்லை" என விளக்கமளித்திருந்தார்.
தொடர்ச்சியாகச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருவதால், "என்னால் அமைதியாக இருக்க முடியாது" எனக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அர்ஜுன் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு.. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த நடிகர் அர்ஜுன்..! #Chennai | #CommissionerOffice | #ActorArjun | #PolimerNews https://t.co/isdEkuOIgB
— Polimer News (@polimernews) November 19, 2026

