#JUST IN : பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி மரணம்..!!

 
Q

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கடையில் பஜ்ஜி சாப்பிட்ட ஸ்ரீத்திகா என்ற 9 வயது சிறுமிக்குத் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்களாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்தச் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடலைக் கைப்பற்றியுள்ள போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.