#JUST IN : விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு..!!

 
1

தி.மு.க - வி.சி.க கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் மார்ச் 23-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டணி ஒப்பந்தம் தொடர்பான முக்கிய தகவல்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பகிர்ந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

 

சென்னை கோயம்பேட்டிலுள்ள தனியார் விடுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் "தி.மு.க கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளையும் 2028-ம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களில் ஒரு ராஜ்ய சபா சீட்டும் தி.மு.க-விடம் கேட்டுப் பெற வேண்டும்" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது தி.மு.க கூட்டணிக்குள் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

 

இந்நிலையில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.தொல் திருமாவளவன் அவர்களும் இன்று (24-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாட்டில் பொத்தம் 8 (எட்டு) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதெனவும் அவற்றில் 6 தனித் தொகுதிகளிலும் 2 பொது தொகுதிகளிலும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.

 

1