#JUST IN : 2022ம் ஆண்டு தாக்குதல் வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!

 
1

புதுச்​சேரி லாஸ்​பேட்டை எழில் நகரில் தமிழக நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தம்பி மரிய குளோத் வீடு உள்​ளது. அமைச்​சருக்​கும் அவரது தம்​பிக்​கும் இடை​யில் சொத்து பிரச்​சினை இருந்து வந்​தது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி மரிய குளோத்​தின் வீடு புகுந்து, அவரை​யும் அவரது தம்பி மனைவி கேர்​லைன் கிளேட் என்​பவரை​யும் தாக்​கிய​தாக லாஸ்​பேட்டை காவல்​நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது.

அதன் அடிப்​படை​யில் கொலை முயற்சி உள்​ளிட்ட 6 பிரிவு​களில் வழக்​குப்​ப​தி​வானது. இதுதொடர்​பான வழக்கு புதுச்​சேரி குற்​ற​வியல் நடுவர் மன்றத்தில் நடை​பெற்று வரு​கிறது.

வழக்கு விசா​ரணைக்கு ஆஜரா​காத மரிய வில்​சன், அந்த விசா​ரணையை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். ஆனால், `வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட சம்​பவத்தை நிரூபிப்​ப​தற்​கான ஆதா​ரங்​கள் இருப்​ப​தாகக் கூறி அந்த மனுவை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. இதையடுத்​து, அந்​தத் தாக்​குதல் சம்​பவத்​தின் சிசிடிவி காட்​சிகளை சேகரித்​து, நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிறகு இதற்​கான குற்​றப்​பத்​திரி​கையை லாஸ்​பேட்டை போலீ​ஸார் தாக்​கல் செய்​தனர் .

இதற்​கிடையே, ஆர்​.கே.நகர் தொகு​தி​யின் தவெக வேட்​பாள​ராக மரிய​வில்​சன் அறிவிக்​கப்​பட்ட நேரத்​தில், உருட்​டுக்​கட்​டை​யுடன் அவர் தம்பி வீட்​டில் தாக்​குதலில் ஈடு​பட்ட வீடியோ சமூகவலைத் தளங்​களில் வைரலானது. இச்​சூழலில் நீதி​மன்ற வாய்​தாவுக்கு அமைச்​சர் மரிய வில்​சன் ஆஜரா​காத நிலை​யில், இவ்​வழக்​கில் அவர் மீது குற்​றப்​பத்​திரிக்கை தாக்​கலானது. அந்த குற்​றப்​பத்​திரி​கையை நீதி​மன்​றத்​தில் ஆஜராகி பெற முதன்மை குற்றவியல் நடுவர் சேரலாதன் உத்​தர​விட்​டுள்​ளார். அதன்​படி இன்று புதுச்​சேரி குற்​ற​வியல் நடு​வர் மன்​றம் எண் 1-ல் கட்​டா​யம் ஆஜராகு​மாறும் அந்த உத்​தர​வில்​ கூறியுள்​ளார்​.

இந்நிலையில் மரிய வில்சன் இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை.தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இருப்பதால் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஜூலை 10 ஆம் தேதி அமைச்சர் மரிய வில்சன் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.