#JUST IN : விஜய் பிரச்சாரத்தில் மீண்டும் விபத்து - 2 பேர் படுகாயம்..!

 
1

புதுச்சேரிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று கொண்டிருந்த விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து டூவீலரில் சென்றவர்கள் ஜீப் மீது மோதியல் 2 பேர் படுகாயமடைந்தனர்

புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தில் விஜய்யை பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் பாதுகாப்பு வாகனத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயமடைந்த 2 இளைஞர்கள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தை பின்தொடர வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்த பிறகும் இளைஞர்கள் அதனை மதிக்காமல் பின்தொடர்வதால் விபத்துகள் தொடர் கதையாக உள்ளது. ஏற்கெனவே, தஞ்சையில் விபத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.