#JUST IN : பகல் 1 மணி நிலவரம் - மதுராந்தகம், தாராபுரத்தின் நிலவரம் என்ன?

 
1

மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், தாராபுரம் அடுத்த குண்டடம் மானூர்பாளையத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில் 10 நிமிடம் கழித்து வாக்குபதிவு தொடங்கியது. இடைத்தேர்தலை ஒட்டி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், மற்ற ஆவணங்களை அடையாளமாக பயன்படுத்தும் வகையில் 12 ஆவணங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில்,  ஆதார் கார்டு, பணி அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், பணியாளர் அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களை பயன்படுத்தலாம் 

காலை 9 மணி நிலவரம் :

தாராபுரம் இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 17.55 சதவீத வாக்குகளும், மதுராந்தகம் இடைத்தேர்தலில், 15.99 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


காலை 11 மணி நிலவரம் - மதுராந்தகம், தாராபுரத்தின் நிலவரன் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 35.55 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. தாராபுரத்தில் 37.28 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.

1 மணி நிலவரம் - மதுராந்தகம், தாராபுரத்தின் நிலவரன் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 1 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 55.18 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. தாராபுரத்தில் 56.09 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.