#JUST IN : கூடுதல் கட்டணம் வசூல்: மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்..!
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையைவிட, பாட்டிலுக்கு ரூ.10 மற்றும் அதற்கு மேலும் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார்கள் இருந்து வருகின்றன.இந்தக் கூடுதல் வசூல் முறைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று த.வெ.க. அரசு அறிவித்தது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் மேலும் 150 பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று (செப்.2) 67 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.
ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.

