ஜூனியரை அரை நிர்வாணமாக்கி டார்ச்சர்... எஸ்ஆர்எம் கல்லூரியில் நடந்த கொடூரம்
டெல்லியை சேர்ந்த மாணவனை பொத்தேரியில் அரை நிர்வாணமாக்கி தாக்கிய சீனியர் மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் பிரபல தனியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இந்த பல்கலைகழகத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடாகா, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் என லட்சக்கணக்கான மாணவர் பொத்தேரியில் தங்கி படித்து வருகின்றனர், இந்த நிலைல் புதுடெல்லியை சேர்ந்தவர் உத்தேஷ் மேத்தா(19). இவர் பொத்தேரியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி. டெக். மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். பொத்தேரியில வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளர். இந்த நிலையில் உத்தேஷ் மேத்தா தங்கியுள்ள வீட்டிக்கு வருகை தந்த நான்கு சீனியர் கல்லூரி மாணவர்கள் அரை நிர்வாணணமாக்கி பணம் கேட்டு வாயை பொத்தி காலால் எட்டு உதைத்து கம்பி மற்றும் ஒயரால் கடுமையாக தாக்கி காலை பிடித்து விடுமாறு கட்டாயபடுத்தியுள்ளனர். மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்த நிலையில் 10 ஆயிரம் பணம் கொடுத்த பிறகே வெளியே சென்றுள்ளனர். இந்த நிலையில் மாணவன் தனது தந்தைக்கு தகவல் தெரியபடுத்தியுள்ளார்.
காயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சக நண்பர்கள் அனுமதித்துள்ளனர். மாணவனின் தந்தை வழக்கறிஞரை தொடர்ப்பு கொண்டு தகவல் தெரியபடுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் விஜய்கந்தன் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நிலாக்ஸ் (21), கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த உட்கஸ் (21), பஞ்சாப் மாநிலத்தை சிதக்சிங் (21), டெல்லியை சேர்ந்த திவ்யான்ஸ் (21) ஆகிய நான்கு பேரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். டெல்லியை சேர்ந்த மாணவனை சென்னை புறநகர் பகுதியான பொத்தேரியில் ஜுனியர் மாணவனை அரை நிர்வாணமாக்கி தாக்கி, காலை பிடித்து விடுமாறு கட்டாயபடுத்தியும், தேர்வுக்காக மாணவன் வைத்திருந்த பணத்தை பறித்து சென்ற சீனியர் நான்கு மாணவர்கள் கைதான சம்பவம் பொத்தெரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காதான நான்கு மாணவர்களில் இரண்டு பேர் மீது திருட்டு மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


