சென்னை புரசைவாக்கம் மாணவர்களுக்கு குட் நியூஸ்... ஜூன் 6ம் தேதி விடுமுறை
சென்னை புரசைவாக்கம், கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி நாளை (ஜூன் 06) சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அ/மி கங்காதரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாவின் ஒரு பகுதியாக வருகிற 06.06.25 / வெள்ளிக்கிழமை (அன்று) இத்திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய இரண்டு திருத்தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது என்பதால், இத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு 06.06.2025 (நாளை) இக்கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கங்காதரேசுவரர் மேல்நிலைப்பள்ளி,ELM school, MCTM ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, MCTM பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அழகப்பா மேல்நிலைப்பள்ளி, Evarts School, சென்னைமாநகராட்சிபள்ளி (வெள்ளாதெரு) ஆகிய பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகட.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21.06.2025 (சனிக்கிழமை) கீழ்க்காணும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது”


