ஜூன் 3 இனி செம்மொழி நாளாக கொண்டாடப்படும்.. சட்டசபையில் அறிவிப்பு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதி தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்
பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கட்டுரை, பேச்சுப்போட்டி, மாவட்ட மாநில அளவில் நடத்தி பரிசுத்தொகை வழங்கப்படும். இதற்காக ஒரு கோடியே 88 லட்சத்து 57 ஆயிரம் வழங்கப்படும்.
தமிழ் அறிஞர்கள் ஒன்பதின்மர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். நூலுரிமை தொகைக்கென ரூபாய் 91 லட்சத்திலிருந்து 35 ஆயிரம் வழங்கப்படும்.
டெல்லி தமிழ் சங்கத்தின் கலையரங்கத்தில் தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் நூலை பதிப்பிக்கும் பதிப்பாளருக்கு பரிசு தொகை உயர்த்தி வழங்கப்படும். கூடுதல் செலவினத்திற்கு ரூபாய் 11 லட்சத்து 55 ஆயிரம் வழங்கப்படும்.
ஜனவரி 25ம் நாளினை தமிழ்மொழித் தியாகிகள் நாள் என பின்பற்றி, புகழ் வணக்கம் செய்திட ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது தோற்றுவிக்கப்படும் ரூபாய் 17 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
வீறுகவியரசர் முடியரசன் அவர்களின் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருச் சிலை நிறுவிட ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும்.
சண்டிகர் தமிழ் மன்றம் கட்டிட விரிவாக்க பணிக்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.