கமிஷனர் ஆபீஸில் ஜூலி புகார்
விஜய் பற்றி பேசியதால் பழிவாங்குறாங்க என தவெக நிர்வாகி மீது நடிகை ஜூலி போலீசில் புகார் அளித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் பேசிய குட்டி கதை குறித்துக் கருத்து தெரிவித்ததால், தன் மீது திட்டமிட்டு சிலர் அவதூறு பரப்புவதாகப் பிக் பாஸ் ஜூலி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கிட்னி விற்பனை மோசடியில் தன்னை தொடர்புபடுத்தி ஆதாரமற்ற பொய்யான வீடியோக்களை வெளியிட்டு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக தவெக நிர்வாகி உட்பட 8 பேர் மீது ஜூலி புகார் அளித்துள்ளார். அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் பரப்புரையில் விஜய் பேசியதை விமர்சித்து ஜூலி வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை மிரட்டி சமூக வலைதளங்களில் தவெகவினர் பதிவிட்டுவருவதால், ஜூலி மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அதில், விஜய் அண்ணா நான் உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டுமெனில், நான் வீட்ல இருப்பேன். இல்லன்னா என் ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க. என்னை சார்ந்தவங்கள எதுவும் பண்ண வேண்டாம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

