‘நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது?’ செந்தில்பாலாஜியை வற்புறுத்திய அமலாக்கத்துறை

 
செந்தில் பாலாஜி

நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது? என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Image


சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலக்க துறையால் கைது செய்யப்பட்டார்.  தற்போது செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர்  செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.  இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்படிசெந்தில் பாலாஜி ஜாமின் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது உடல்நலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பு வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த மனு மீதான விசாரணையின்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபில் சிபில் தனது வாதத்தை எடுத்துரைத்தார். அப்போது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது? என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டதாகவும் கபில் சிபில் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரது நீதிமன்ற காவலை வரும் 29ம் தேதி வரை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.