அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்

 
eps

அதிமுக பொதுக்குழு தொடர்பான  பிரதான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக  அறிவித்துள்ளார்.

Image

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022 ம் ஆண்டு உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த வழக்குகளில் இடைக்கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்குகள்  நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, கடந்த 2022ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து  இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து  விலகுவதாக அறிவித்தார். மேலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிடும் வகையில், தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.