திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்திற்கு நீதிபதி பாராட்டு

 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

விபூதி கொடுக்கும் இடம் சன்னிதியில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி  கொடுத்தால் கூட்ட நெரிசலை கட்ட படுத்த முடியும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் ஆவணித்திருவிழா : தீராத நோய் தீர்க்கும் திருச்செந்தூர்  முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி | Thiruchendur Murugan Temple Panneer  Ilai vipudhi for ...

திருச்செந்தூரை சேர்ந்த வீரபாகு மூர்த்தி தாக்கல் செய்த மனுவில், முருகனின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் 2-ஆம் படை வீடாக திகழ்கிறது. கோவிலுக்கு வரும் ஆயிரக்கக்காண பக்தர்களுக்கு  தற்போது மகா மண்டபத்தில் பக்தர்கள் கொண்டு வரும் அர்ச்சனை தேங்காய் உடைக்கப்பட்டு வருகிறது  சன்னதியில் மயில் தேவர் சிலை முன்புறத்தில் பக்தர்களுக்கு விபூதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வரிசையில் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. விபூதி கொடுக்கும் இடமும்  தேங்காய் உடைக்கும் இடம்  பாரம்பரிய முறைபடி  ஏற்கனவே இருந்தபடி சந்நதிக்கு அருகே மாற்றம் செய்யப்பட்ட வேண்டும். ஆனால் விபூதி மற்றும் தேங்காய் உடைக்கும் இடத்தை கோயில் இனை ஆணையர் இட மாற்றம் செய்துள்ளார் இதனை ரத்து  செய்ய கோரி மனு செய்திருந்தார்.

உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கியது- Dinamani


இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. ஆண்டுதோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்கள்  கூட்டம் அதிகமாக இருந்தாலும்,திருச்செந்தூர்  கோவிலை  தூய்மையாக  வைத்து உள்ளனர். அதற்க்கு கோவில்  நிர்வாகத்தை  பாராட்ட வேண்டும். மேலும் பக்தர்களுக்கு விபூதி கொடுப்பதில்  கோவில் நடைமுறைகள், பக்தர்களின்  உணர்வுகளை மதிக்க வேண்டும். விபூதி கொடுக்கும் இடம் சன்னிதியில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி  கொடுத்தால் கூட்ட நெரிசலை கட்ட படுத்த முடியும், எனவே இது குறித்து மனு தாரை தரப்பில் எந்த இடம் என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கூறிய நீதிபதி, விரிவான வாதத்திற்காக நவம்பர் 24-ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.