"மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பார்கள்" - ஜாய் கிரிசில்டா
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அளித்த புகாரையடுத்து அவரிடம் 4 மணிநேரமாக பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜாய் கிரிசில்டா, “மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பார்கள். கடந்த 2 வருடங்களாக என்ன நடந்தது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். திருமணம் செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையாகவே மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து கொண்டார், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். என் குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளேன். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் கேட்டுக்கொண்டார்.

