தந்தை பெயருடன் குழந்தையின் பிறப்பு சான்றிதழை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா..!!

 
Q Q

மாதம்பட்டி ரங்கராஜ் பெயரை சொன்னாலே விஐபி முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவருக்கும் பரிட்சயம். கேட்டரிங் சர்வீஸ் மூலம் பிரபலமான இவர், ‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

இவரது மனைவி ஸ்ருதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. இந்த சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல்துறையில் புகார் அளித்திருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் எதையும் பொது வெளியில் தெரிவிக்கவில்லை.

மாதம்பட்டி ரங்கராஜால் பல முறை கருவுற்று அவரின் வற்புறுத்தலால் கருக்கலைப்பும் செய்திருப்பதாகவும் கூறியிருந்தார். இதனிடையே, ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தான் நிறைமாத கர்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்பதாலும், தற்போது தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், 7 மாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவுத்தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. விசாரணை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், குழந்தை பிறந்துள்ளதை தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, “ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ். அப்பாவின் முகத்தையே உரித்து வைத்துள்ளார்” என்று கூறி குழந்தையின் கை விரல் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில், குழந்தையின் பிறப்பு சான்றிதழை வெளியிட்டுள்ளார் ஜாய் கிரிசில்டா. அதில் தந்தை பெயர் என்ற இடத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும், “சில பொறுப்புகள் வலிக்காக வழங்கப்படுகின்றன. பெருமைக்காக அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.

Q