“மாதம்பட்டி ரங்கராஜூவை கடந்த 1 மாதமாக காணவில்லை”- ஜாய் கிரிசில்டா

 
s s

“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்” செய்த செயல்களுக்கான பலனை நிச்சயம்  நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜ்க்கு ஜாய் கிரிசில்டா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாதம்பட்டி ரெங்கராஜ் மீது 10 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை- ஜாய் கிரிசில்டா

திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக  புகார் அளித்திருந்தார். இந்நிலையில் ஜாய் கிரிசில்டா தனது எக்ஸ் தளத்தில், “காணவில்லை.. Ragha Rangaraj - வின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜூவை கடந்த 1 month ஆக காணவில்லை DNA test க்கு தலைமறைவாக உள்ளார். இவரை event இல் பார்த்தால் உடனே எனக்கு DM செய்யவும். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம் அதான் ஓளிந்து ஓடுகிறார். Proof பண்ணினா தான் சார் மாடிப்பர். இல்ல ஒருவேலை பணம் குடுத்து DNA test correct பண்ண time எடுக்கிறார் போல... 


நீங்க தான் எல்லாமே legal ல face பண்ணுற ஆள் ஆச்சே இதை மட்டும் ஏன் உங்களால் legal ஆ face பண்ண முடியவில்லை ????  Husband #madhampattyrangaraj என்னை நீங்கள் ஏமாற்றலாம், ஊரை நீங்கள் ஏமாற்றலாம், சுற்றி இருக்கிறவர்கல ஏமாற்றலாம், ஆனால் உங்கள் மனசாட்சியையும் கடவுளையும் நீங்கள் ஏமாற்ற முடியாது. “அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்” செய்த செயல்களுக்கான பலனை நிச்சயம்  நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.