"பிறக்காத என் குழந்தைக்கு நீதி வேண்டும்.. மாதம்பட்டி ரெங்கராஜ் மீது 10 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை”- ஜாய் கிரிசில்டா

 
மாதம்பட்டி ரெங்கராஜ் மீது 10 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை- ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரெங்கராஜ் மீது 10 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை- ஜாய் கிரிசில்டா

நடிகர் மாதம்பட்டி ரெங்கராஜ் கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார். 10 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் பிறக்காத என் குழந்தைக்கும் நீதி கேட்டு தமிழக அரசிடம் கைகூப்பி மன்றாடுகிறேன், நடவடிக்கை எடுங்கள் என ஜாய் கிரிசில்டா கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபல சமையல் கலைஞராக இருந்து வரும் ரங்கராஜ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.  அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பல முக்கியஸ்தர்களின் இல்ல விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் சர்வீஸ் கட்டாயம் இடம்பெற்றிருக்கும் என்கிற அளவிற்கு பாப்புலரான நபராகவும் இருந்து வருகிறார்.  ரங்கராஜுக்கு  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ருதி என்பவருடம் திருமணமாகி  இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே  பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடந்த மறுநாளே ஜாய் கிரிஸில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் அறிவித்தது  சமூக வலைதளங்களில் பெரும் பேசுப்பொருளாகியது.  முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே எப்படி இரண்டாவது திருமணம் செய்ய முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். கடந்த மாதம் 29ஆம் தேதி மாதம்பட்டி ரங்கராஜ், 7 மாத கர்ப்பமாக இருக்கும்  தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.  

இந்நிலையில் மாதம்பட்டி ரெங்கராஜ் மீது புகார் அளித்து 10 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாய் கிரிசில்டா வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னை காவல் ஆணையரிடம் நான் புகார் அளித்து 10 நாட்கள் ஆகிறது, அதில் பிரபல சமையல்காரரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பம் தரித்தார். இப்போது நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். நிறைமாத கர்ப்பத்திலும், நான் என் பார்வையற்ற தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தேன். எனது புகாரின் நிலை எனக்குத் தெரியவில்லை. மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர் எனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அநாகரீகமான, ஆபாசமான கருத்துக்களை கட்டவிழ்த்து விடுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு நீதி வழங்குமாறு கைகூப்பி மன்றாடுகிறேன். எந்தவொரு விஐபியும் ஒரு பிரபலமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்து, எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுற்றித் திரிய முடியுமா? எனது பிறக்காத குழந்தைக்கும் எனக்கும் நீதி வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.