“என் குழந்தை ஐசியூவில் இருக்கு... டிஎன்ஏ சோதனைக்கு தயார்” - ஜாய் கிரிசில்டா
எனக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என நிரூபிக்க டிஎன்ஏ சோதனைக்கு தயார் என ஜாய் கிரிசில்டா அறிவித்துள்ளார்.

ஜாய் கிரிசில்டாவை விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக மகளிர் ஆணையத்தில் நான் கூறவில்லை, மிரட்டலின்பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் திருமணம் செய்யப்பட்டது என மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் டி.என்.ஏ. சோதனை மூலம் குழந்தை என்னுடையது என நிரூபித்தால் வாழ்நாள் முழுவதும் அதனை கவனித்துக் கொள்கிறேன் என்றும் அவர் உறுதி அளித்திருந்தார். மேலும் ஜாய் கிரிசில்டா பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.1.50 லட்சம் கோரினார், ஜாய் கிரிசில்டா அவரது BMW காருக்கு, ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யும் செலுத்த வேண்டும் என கோரினார் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ஜாய் கிரிசில்டா, “நான் மிரட்டி திருமணம் செய்ய மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை கிடையாது. டிஎன்ஏ பரிசோதனைக்கு நான் தான் வலியுறுத்தினேன். மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏ பரிசோதனை வேண்டாம் என்றார். எனக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என நிரூபிக்க டிஎன்ஏ சோதனைக்கு தயார். எனது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜால் என்னிடம் இருந்த 2 கார்களை இழந்தேன். யாரின் பின்புலத்டில் மாதம்பட்டி ரங்கராஜ் இவ்வாறு செய்கிறார் என தெரியவில்லை. விசாரணையில் ஒரு மாதிரியும், வெளியே வேரு மாதிரியும் ரங்கராஜ் பேசுகிறார்.” என்றார்.


