“தைரியம் இருந்தால் டிஎன்ஏ டெஸ்டுக்கு வாங்க”- மாதம்பட்டி ரங்கராஜை வம்புக்கு இழுத்த ஜாய் கிரிசில்டா
தைரியம் இருந்தால் டிஎன்ஏ டெஸ்டுக்கு வாங்க ஹஸ்பெண்ட் என மாதம்பட்டி ரங்கராஜை மீண்டும் வம்பு இழுத்தார் ஜாய் கிரிசில்டா.

தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, காவல் துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் பேட்டியும் அளித்திருந்தார். மேலும் ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி மகளிர் ஆணையத்திலும் புகார் கூறியிருந்தார். மேலும் நீதிமன்றத்தில் தனக்கு பிறந்த குழந்தைக்கு டி. என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் டி. என்.ஏ பரிசோதனையில் தந்தை என்று தெரிய வந்தால் குழந்தை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க மாதம்பட்டி ரங்கராஜ் தயாராக இருப்பதாக அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜாய் கிரிசில்டா தனது எக்ஸ் தளத்தில், “Helloooo Husband #madhampattyrangaraj DNA பரிசோதனைக்கு நீங்கள் Statement கொடுத்துள்ளீர்கள் ஆனால் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? என்ன பயம்? அடிக்கடி பணம் கொடுத்து ஊடகங்களில் எனக்கெதிராக யூடியூப், செய்திகளில் தகவல்கள் வெளியிடச் செய்கிறீர்கள். நான் அமைதியாக இருந்தாலும், உங்க உள்குத்து என்னன்னு தெரியாம போய்டுமா என்ன? தைரியம் இருந்தால் DNA Testக்கு வாங்க Husband சும்மா Statement குடுத்தா மட்டும் போதாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


