ஜாய் கிரிசில்டாவிடம் 4 மணி நேரமாக விசாரணை

 
ஜாய் கிரிசில்டா

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அளித்த புகாரையடுத்து அவரிடம் 4 மணிநேரமாக பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. 

Madhampatty Rangaraj and Joy Crizildaa wearing traditional wedding attire, including garlands of white flowers and red roses. Madhampatty Rangaraj is dressed in a beige outfit, and Joy Crizildaa is in a red outfit with gold trim. Both are smiling and standing close together indoors, with a clock showing 2:40 visible in the background.

 புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் இருந்து வருகிறது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அண்மையில், ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமண புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, தனிப்பட்ட வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையரகத்திலும் புகார் அளித்தார். மேலும், பல்வேறு யூடியூப் தளங்களில் பேட்டி அளித்து வருகிறார் ஜாய்.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்தது தொடர்பாக ஜாய் கிரிசில்டாவிடம் 4 மணிநேரமாக பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்பட வீடியோ ஆதாரங்கள் துணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.