வேலுமணி, அண்ணாமலை வார்த்தைப்போர் ஒரு நாடகம் - ஜோதிமணி

 
பத்திரிகையாளரை மிரட்டிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்! – ஜோதிமணி எம்.பி கண்டனம்

எஸ்.பி.வேலுமணிக்கும், அண்ணாமலைக்கும் இடையே நடக்கும் வார்த்தைப் போர் ஒரு நாடகம் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை

கோவை தொகுதியில் தி.மு.க வெற்றி பெற, இரண்டாம் இடத்துக்கு வந்தார் அண்ணாமலை. ஆனால் ஜெயலலிதா காலத்திலிருந்து கோவையில் வலுவாக காலூன்றியிருந்த அ.தி.மு.க. 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. மேற்கு மண்டல தளபதி என அதிமுகவினரால் கொண்டாடப்படும் எஸ்.பி.வேலுமணி எங்கே கோட்டை விட்டார் என அக்கட்சியினர் விவாதிக்கத் துவங்கியிருக்கிறார்கள். இதனிடையே அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்றும், அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருந்தால் நிறைய இடங்கள் வென்றிருக்கலாம் என்றும் எஸ்பி வேலுமணி கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்பி வேலுமணிக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை, நான் பாஜக தலைவராக இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி இல்லை என பதிலுக்கு அண்ணாமலையும் கூறியிருந்தார்.


இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிமுகவின் திரு. வேலுமணி அவர்களுக்கும்  ,பாஜகவின் திரு. அண்ணாமலைக்கும் இடையே நடக்கும் வார்த்தைப் போர் ஒரு நாடகம். கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்குப் பணிந்து ,அதிமுக களத்தை விட்டுக்கொடுத்தது என்பதே உண்மை. இதையெல்லாம் மீறித்தான் இந்தியா கூட்டணி,திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. கோவையில் அதிமுக,பாஜக  மறைமுகக் கூட்டணியை மறைக்கவும், அப்பாவி அதிமுக தொண்டர்களை ஏமாற்றவுமே இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது” என விமர்சித்துள்ளார்.