“என்னை வேட்பாளராக அறிவித்த திருமாவளவனுக்கு நன்றி”- ஜோதிமணி பேட்டி

 
“என்னை வேட்பாளராக அறிவித்த திருமாவளவனுக்கு நன்றி”- ஜோதிமணி பேட்டி

காட்டுமன்னார்கோவிலில் விசிக சார்பில் போட்டியிடும் ஜோதிமணி காங்கிரஸ் கட்சியை சார்ந்தவராவார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட மறைந்த தலைவர் எல். இளையபெருமாளின் மகன் ஜோதிமணி  பேட்டியளித்தார். அப்போது பேசிய ஜோதிமணி, “சட்டமன்ற தேர்தலில் நான் காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்பமனு தாக்கல் செய்தேன். ஆரம்ப காலத்தில் காங்கிரசில் சேர்ந்த நான், பின் தமிழ் மாநில காங்கிரசில் இணைந்து மீண்டும் காங்கிரசில் இணைந்தேன். நான் எந்த இயக்கத்தில் இருந்தாலும் எனக்கு வாய்ப்பளித்த திருமாவளவனுக்கு நன்றி” என்றார்.

மறைந்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் எல். இளையபெருமாளின் மகன் ஜோதிமணி. ‘இளையபெருமாள் கமிட்டி’ மூலம் இந்தியாவில் தீண்டாமையை ஒழுக்க அரசுக்கு மிக முக்கியமான பரிந்துரைகளை வழங்கியவரின் மகனாவார்.