என் மீதான பொய் பிரச்சாரங்களை மீறி வெற்றி பெற்றுள்ளேன்- ஜோதிமணி

 
கமல் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்; செந்தில்பாலாஜிக்கு வக்காலத்து வாங்கும் ஜோதிமணி

கரூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோதிமணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை வீழ்த்தி  வெற்றி பெற்றுள்ளார். 

ராகுல்காந்தியின் நம்பிக்கைக்குரியவர்! ஊழலுக்கு எதிரானவர்! யார் இந்த ஜோதிமணி?  | Who is Jothimani, second time MP of Karur Lok Sabha constituency? - Tamil  Oneindia

கரூர் அடுத்த தளவாபாளையம் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுவிடம் வெற்றி சான்றிதழ் பெற்ற ஜோதிமணி,  கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் காமராஜர் சிலைகளுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.  அப்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, "1 லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் கரூர் தொகுதி மக்கள் எனக்கு மகத்தான வெற்றியை தந்துள்ளார்கள். கடந்த ஓராண்டாக பணம் செலவு செய்து என் மீது தொடர்ந்து பொய் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அத்தனையும் மீறி வெற்றி பெற்றுள்ளேன். ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகி உள்ளன. நிச்சயமாக இந்தியா கூட்டணி தான் மத்தியில் ஆட்சி அமைக்கும். இதுவரை மோடி அரசுக்கு எதிராக போர் நடத்தினோம். நாளை முதல் மத்தியில் ஆட்சி அமைப்பதற்காக போராட இருக்கிறோம்" என்றார்.