கே.டி.ராகவன் விவகாரம்- அந்த கமிட்டி என்னானது?அண்ணாமலைக்கு 50 சாட்டைகளை அனுப்பலாமா?: ஜோதிமணி

 
ஜோதிமணி

ண்ணா பல்கலைக்கழகத்திலேயே பாதுகாப்பு குறைபாடு இருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் தான் இருக்கிறது என எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

ஜோதிமணி


புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி எம்பி, “எங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் அதற்கு எதிராக பலத்த குரலை கொடுக்க வேண்டியது அனைவரது கடமை. பாலியல் விவகாரம் தாண்டி பெண்கள் மீது எந்த ஒடுக்குமுறை நடந்தாலும் அதனை கண்டிக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திலேயே இது போன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு ஏற்கனவே குற்ற பின்னணி இருக்கிறது. பல்கலைக்கழக வளாகமே பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மட்டுமின்றி அனைத்து கல்வி நிறுவனங்களிலுமே பெண்களுக்கு பாதுகாப்பான நிறுவனங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அண்ணா பல்கலைக்கழக சம்பவமாக மட்டும் சுருக்கி பார்க்கக் கூடாது. 

காஷ்மீர்,மணிப்பூர்.யூபி இந்த மாநிலங்களில் எல்லாம் பெண்களுக்கு எதிரான கடுமையான நெஞ்சை ஒலுக்கக்கூடிய குற்றங்கள் நடந்தபோது பாஜக அரசு ஒன்றிய பாஜக அரசு குற்றவாளிகளை பாதுகாக்கின்ற  அவமானகரமான செயலை செய்து பெண்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்கள். தற்போது இங்கு தமிழ்நாடு அரசு தமிழ்நாடு காவல்துறை இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை நான் பாராட்டுகின்றேன். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாற்றாமல் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பாஜக மாநில தலைவர் சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளார். பாஜகவில் கேடி ராகவன் என்று ஒருத்தர் இருந்தார். அவர் பாஜகவை சேர்ந்த ஒரு பெண்ணிடம் மிகவும் அசிங்கமாக அருவருக்கத்தக்க வகையில் பாலியல் கொடூரத்தை நடத்தினார். அந்த காட்சியை கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர். அப்போது இதே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு கமிட்டியை அமைத்தார். அந்த கமிட்டி ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கும் என்று அண்ணாமலை அப்போது கூறியிருந்தார். அந்த கமிட்டி என்னானது? அவர்கள் கொடுத்த அறிக்கை என்னானது? அதற்காக அவருக்கு 50 சட்டைகளை நாங்கள் அனுப்பலாமா? அந்த சாட்டை சம்பவம் எப்போ நடந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும். அண்ணாமலையின் உறவினர் வீட்டில் சோதனை நடக்கிறது. அந்த சோதனையில் 13 கோடி ரூபாய் பிடிக்கப்பட்டதாகவும் 250 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்கள் அண்ணாமலிடம் கேட்டால் ஜோதிமணி,செந்தில் பாலாஜி,விஜயபாஸ்கர் எல்லாம் சொந்தம் தான் என்று கூறுகிறார்.

அண்ணாமலையின் அக்கா கணவர் செங்கல் சூளை ஒன்றை நடத்துகிறார்.‌ அந்த செங்கல் சூளையில் பங்குதாரராக உள்ளவர் இடம் தான் சோதனை நடத்தி 13 கோடி பணமும் 250 கோடி சொத்து ஆவணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அதனை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு சாட்டையால் அடித்துக் கொண்டது அரசியலாகிறதே தவிர வேற எந்த காரணமும் இல்லை. வேற எந்த காரணத்திற்காகவும் இது அரசியல் ஆக்கப்படவில்லை” என்றார்.