தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்!

 
assembly

தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 239-ஆம் பிரிவுடன் சேர்த்து படிக்கப்பட வேண்டிய இந்திய அரசமைப்பின் 243-K எனும் உறுப்பின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி பா. ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., அவர்களை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளராக அவர் பதவியேற்ற நாளிலிருந்து ஐந்தாண்டுகள் கால அளவிற்கு அல்லது அவர் அறுபத்து ஐந்து வயது எய்தும் வரை, இதில் எது முந்தையதோ அதுவரை, இதன் மூலம் பணியமர்த்தம் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.