“BIGG BOSS-ஐ விட தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை அதிகம் பார்க்கிறார்கள்; புதுச்சேரியிலும் லைவ் செய்யலாம்”- ஜோஸ் சார்லஸ் மார்டின்

 
“BIGG BOSS-ஐ விட தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை அதிகம் பார்க்கிறார்கள்; புதுச்சேரியிலும் லைவ் செய்யலாம்”- ஜோஸ் சார்லஸ் மார்டின் 

BIGG BOSS-ஐ விட தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை அதிகம் பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு டிரெண்டிங்கில் இருக்கிறது என எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் , “BIGG BOSS-ஐ விட தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை அதிகம் பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு டிரெண்டிங்கில் இருக்கிறது. தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும். புதுச்சேரியிலும் வெளிநாடுகளின் தூதரக அலுவலகங்களை அமைக்க வேண்டும். புதுச்சேரிக்கு உயர்நீதிமன்ற கிளை வேண்டும். முதல்வர், ஆளுநர் அமைச்சர்கள், MLA-க்கள் இணைந்து ஒரு கூட்டம் நடத்தினால் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்க வாய்ப்பு உள்ளது. திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்படுகிறதா என ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். சோலார் திட்டத்தை எனது தொகுதியில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றேன். அதற்கான திட்டங்களை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்” 

இலங்கைக்கு ரூ.50,000 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது; இதுபோல புதுச்சேரிக்கும் நிதி மத்திய அரசு அளிக்க வேண்டும்; இதற்காக அனைவரும் டெல்லி செல்ல வேண்டும் என்றாலும் செல்லலாம். காட்டுநாயக்கன், மலைக்குறவர்கள், குருமன்ஸ், எருகுலா உள்ளிட்ட பழங்குடியின மக்களுக்கு தனி நலத்திட்டங்களும், அவர்களை ST பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரவையில் வைக்கப்படும் கோரிக்கைகள் எப்போது முடிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின் மின் கட்டணம்  அதிகம் உயர்ந்துள்ளதால், தணிக்கை செய்து கட்டணத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். தாய்வழி சான்றிதழ்கள் வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் வழங்குவதால் லஞ்சம் ஒழிக்கப்படும்.புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு தனியாக ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், மின்வாரிய அலுவலகம் அமைத்து தர வேண்டும். புதுச்சேரியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்து பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ள முடியும்; அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களை மாற்றித்தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.