ரூ.1,000 இல்லங்க! அனைத்து பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000- அதிரடி வாக்குறுதி

 
ச் ச்

புதுவையின் வளர்ச்சிக்காக சொந்த பணம் ரூபாய் 100 கோடி ஒதுக்குவேன் என LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரடியா வாக்குறுதியளித்து அதிர வைத்துள்ளார் 

புதுச்சேரியில் "லட்சிய ஜனநாயக கட்சி" என்ற புதிய கட்சியை தொடங்கினார் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின். ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகள் சபையின் உலகளாவிய மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கட்சியின் பெயரையும் அறிவித்தார் ஜோஸ் சார்லஸ் மார்டின். 

இந்நிலையில் மகளிருக்கான வாக்குறுதிகளை LJK  தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவித்தார். புதுவையின் வளர்ச்சிக்காக சொந்த பணம் ரூபாய் 100 கோடி ஒதுக்குவேன் எனக்கூறியுள்ள LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரடியா வாக்குறுதியளித்து அதிர வைத்துள்ளார். அதில், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தனி வாரியம் அமைப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும் புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு ரூ.50,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மணமகள்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவியும், 10 கிராம் தங்கமும் வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு 6 LPG சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். புதுச்சேரியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.35,000 நிதி உதவியும், ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய `JCM-கிட்'-ம் வழங்கப்படும் கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருணமாகாத பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.  என்றும் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளார்.