“ஆதவ் அர்ஜூனன் காசு அடிக்காமல் விஜய் பார்த்து கொள்ள வேண்டும்”- சார்லஸ் மார்ட்டின் கடும் விமர்சனம்

 
ச்

தமிழகத்தில் அமைச்சராக போகும் ஆதவ் அர்ஜூன் காசடிக்காமல் விஜய் பார்த்து கொள்ள வேண்டும், அவர் கமிஷன் அடித்து கெட்ட பெயர் ஏற்படுத்துவார் என லஜக தலைவரும், ஆதவ் அர்ஜூனின் மைத்துனருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

புதுச்சேரியில் தேசிய கூட்டணியில் இடம்பெற்றுள்ள லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் அதன் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்  காமராஜ் நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மைத்துனர் ஆதவ் அர்ஜுனா. இவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனிடையே தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க உள்ள நிலையில் ஆதவ் அர்ஜுன் அமைச்சராக பெறுபேற்க உள்ளார். இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ் சாரலஸ் மார்ட்டின்,  தமிழகத்தில் விஜய்க்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்றும், இந்த தேர்தலில் யாரை அவர் போட்டியிட வைத்திருந்தாலும்   ஜெயித்திருக்கிறார்கள். இது விஜய் என்ற தனி நபருக்கு கிடைத்த வெற்றி இதில் அவர் மக்களுக்கு சேவை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என தெரிவித்தார். 

தொடர்ந்து மைத்துனர் ஆதவ் அர்ஜுன் அமைச்சரவையில் பதவிபெற போவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜோஸ் சார்லஸ் ஆதவ் காசடிக்காமல் எந்த தப்பு செய்யாமல் விஜய் அதை பார்த்து கொள்ள வேண்டும், அவர் கமிஷன் அடித்து கெட்ட பெயர் ஏற்படுத்துவார். இது நாட்டுக்கு நல்லதல்ல என தெரிவித்தார்.