தனிக்கட்சி தொடங்கினார் ஜோஸ் சார்லஸ் மார்டின்!

 
தனிக்கட்சி தொடங்கினார் ஜோஸ் சார்லஸ் மார்டின்! தனிக்கட்சி தொடங்கினார் ஜோஸ் சார்லஸ் மார்டின்!

புதுச்சேரியில் "லட்சிய ஜனநாயக கட்சி" என்ற புதிய கட்சியை தொடங்குகிறார் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின்.

சி.எம் நாற்காலி டார்கெட்… ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தேதி குறிச்சாச்சு-  புதுச்சேரியில் புதிய அரசியல் கட்சி! - jose charles martin new political  party plan in ...


புதுச்சேரியில் "லட்சிய ஜனநாயக கட்சி" என்ற புதிய கட்சியை தொடங்குகிறார் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின். ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகள் சபையின் உலகளாவிய மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கட்சியின் பெயரை அறிவித்தார் ஜோஸ் சார்லஸ் மார்டின். விரைவில் கட்சி தொடக்க விழா நடைபெறும் எனவும், அதில் கட்சியின் கொடி, கொள்கை ஆகியவை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி வெற்றிக் கழகம் என்று முதலில் முடிவு செய்யப்பட்ட பெயர், விஜயுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லையென்பதால் லட்சிய ஜனநாயக கட்சி என்று மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஊழலை ஒழிக்க விரும்பும் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி குறித்து பேசுவோம். பழைய ஊழல் கட்சிகளை சுமக்க விருப்பமில்லை. தவெக தலைவர் விஜய் விரும்பினால் அவருடன் கூட்டணி அமைக்க தயார் என ஜோஸ் சார்லஸ் மார்டின் செய்தியாளரிடம் கூறியது குறிப்பிடதக்கது.