“ஆதவ் ஒரு விஷக்கிருமி... தலைவரையே காலி செய்து அந்த இடத்திற்கு வர முயற்சி செய்வார்”- ஜோஸ் சார்லஸ் மார்டின்
ஆதவ் அர்ஜுனா ஒரு "விஷக் கிருமி" போன்றவர். அவர் எந்த ஒரு அமைப்பிற்குள் சென்றாலும், அதன் தலைவரையே காலி செய்துவிட்டு அந்த இடத்தை அடைய நினைப்பார் என்று தவெக தலைவர் விஜய்க்கு லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, விஜய்க்கு எதிரான பிம்பம் (Narrative). விஜய் மது அருந்துபவர், எப்போதும் போதையிலேயே இருப்பார் என்ற ஒரு தவறான செய்தியை மக்களிடையே பரப்ப இவர்கள் முயல்கிறார்கள். சமீபத்தில் நல்லகண்ணு ஐயா அவர்களின் இறுதிச் சடங்கிற்கு விஜய் வந்தபோது கூட, அவர் மது வாடையுடன் வந்ததாக ஊடகங்கள் மூலம் ஒரு செய்தியைப் பரப்பத் திட்டமிட்டதாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குறிப்பிடுகிறார்.
ஆதவ் அர்ஜுனா ஒரு "விஷக் கிருமி" போன்றவர். அவர் எந்த ஒரு அமைப்பிற்குள் சென்றாலும், அதன் தலைவரையே காலி செய்துவிட்டு அந்த இடத்தை அடைய நினைப்பார். 'துரந்தர்' திரைப்படத்தில் வருவது போல, ஒரு தேசத்திற்குள் ஊடுருவி அதைச் சிதைக்கும் உளவாளி போலச் செயல்படுகிறார். விஜய் அவர்கள் இவரைத் தன் பக்கத்தில் வைத்திருப்பது ஒரு தற்கொலை முயற்சிக்குச் சமம் என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எச்சரிக்கிறார். ஆதவ் அர்ஜுனா தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் பல அரசியல் குழப்பங்களை உண்டாக்கி வருவதாகவும், இவரைப் போன்ற "புற்றுநோய் செல்களை" (Cancerous cells) ஆரம்பத்திலேயே அகற்றாவிட்டால் அது கட்சிக்கு ஆபத்தாக முடியும் என்றும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் இந்த வீடியோவில் வலியுறுத்துகிறார்.

