"எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் ஜான் பென்னிகுவிக் புகழை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்" - தினகரன்

 
ttv dhinakaran

தண்ணீர் பஞ்சத்தைப் போக்கி விவசாய உற்பத்தியை பெருக்கியதில் முக்கிய பங்கு வகித்த ஜான் பென்னிகுவிக் அவர்களின் நினைவுதினம் இன்று என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், முல்லைப்பெரியாறு அணையைக் கட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களில் நிலவிய தண்ணீர் பஞ்சத்தைப் போக்கி விவசாய உற்பத்தியை பெருக்கியதில் முக்கிய பங்கு வகித்த ஜான் பென்னிகுவிக் அவர்களின் நினைவுதினம் இன்று.

tn

விடாமுயற்சி, தன்னம்பிக்கையின் மூலம் எத்தனையோ இன்னல்களை கடந்து ஜான் பென்னிகுவிக் அவர்களால் கட்டப்பட்டு லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் முல்லைப் பெரியாறு அணை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அவரின் புகழை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.