புதுச்சேரியில் புதிய அமைச்சராக ஜான் குமார் நியமனம்

 
ச் ச்

புதுச்சேரியில் புதிதாக அறிவிக்கப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் ஜூலை 15ம் தேதி பதவியேற்க உள்ளனர்.

புதுச்சேரியில் 3 புதிய நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம்


புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏக்களாக இருந்த ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் ராஜினாமா செய்ய பாஜக உத்தரவிட்டது. இதனையடுத்து பாஜகவை சேர்ந்த 3 நியமன எம்எம்ஏ-க்கள் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தனர். புதிதாக அக்கட்சியைச் சேர்ந்த செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான், காரைக்காலை சேர்ந்த ராஜசேகர் ஆகியோரை புதிய நியமன எம்எல்ஏ-க்களாக நியமனம் செய்து உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜூலை 15ம் தேதி புதிய நியமன எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் பதவியேற்க உள்ளனர்.  இதேபோல் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சாய் சரவணக்குமாரின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் ஜான் குமார் புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.